< Back
மாநில செய்திகள்
செஸ் ஒலிம்பியாட்: சிறுதானியங்களை கொண்டு 44 கிலோ தம்பி இட்லி - சமையல் கலைஞர் அசத்தல்...!
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: சிறுதானியங்களை கொண்டு 44 கிலோ தம்பி இட்லி - சமையல் கலைஞர் அசத்தல்...!

தினத்தந்தி
|
30 July 2022 7:52 PM IST

செஸ் விளையாட்டுப் போட்டியின் முக்கிய சின்னமான தம்பி பொம்மை வடிவில் 44 கிலோ எடையுள்ள இட்லி தயாரிக்கப்பட்டு உள்ளது.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள கடற்கரை பகுதியில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் இனியவன் 44 கிலோ எடை கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னமான தம்பி உருவத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இட்லியை பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார்.

தமிழகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 44 வது ஆண்டை குறிக்கும் விதமாகவும் தற்பொழுது உலகம் முழுவதும் பேமஸ் ஆகி உள்ள தம்பி பொம்மையின் உருவத்திலேயே 44 கிலோ எடையுள்ள ஒரு இட்லியை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.

இந்த இட்லியில் சிறு தானியங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இன்று பலரும் சிறு தானியங்களை மறந்து துரித உணவகத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில் சிறு தானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அதே வேளையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தம்பி உருவத்திலேயே இட்லியை உருவாக்கி உள்ளதாகவும், அதற்காக 24 மணி நேரம் செலவு செய்து இந்த ஒரு இட்லியை தயார் செய்திருப்பதாகவும் இனியவன் கூறினார்.

இதனை கடற்கரை பகுதிக்கு சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள் ஏராளமானோர் இந்த வித்தியாசமான இட்லியை பார்த்து தங்களது செல்போனில் புகைப்படமும் எடுத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்