திருவாரூர்
தாத்தா, பாட்டிகளுடன் செஸ் போட்டியில் பங்கேற்ற வீரர்கள்
|செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருவாரூரில் வீரர்கள் தங்களுடைய தாத்தா, பாட்டிகளுடன் செஸ் போட்டியில் பங்கேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருவாரூரில் வீரர்கள் தங்களுடைய தாத்தா, பாட்டிகளுடன் செஸ் போட்டியில் பங்கேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செஸ் விளையாட்டு வீரர்கள் தங்களுடைய தாத்தா மற்றும் பாட்டிகளுடன் செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன தொடங்கி வைத்து பார்வையிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:-
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் செஸ் விளையாட்டு ெ்தாடர்பான பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தாத்தா, பாட்டிகளுடன்...
அந்தவகையில் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செஸ் விளையாட்டு வீரர்கள் தங்களுடைய தாத்தா, பாட்டிகளுடன் பங்கேற்று செஸ் விளையாடும் நிகழ்ச்சி நடந்தது.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற ஆகஸ்டு 10-ந் தேதி வரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை இரவு 7 மணி வரையிலும் செஸ் விளையாட்டு விளையாட செஸ் போர்டு வைக்கப்பட்டு உள்ளது. இதில் செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிவேலன், சதுரங்க கழக செயலாளர் பாலகுணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.