< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி
கரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி

தினத்தந்தி
|
16 July 2022 12:58 AM IST

அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

மாணவர்களிடம் செஸ் போட்டி ஆர்வத்தை தூண்டும் வகையில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். பின்னர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, வட்டார வளமைய ஆசிரியர் பஞ்சவர்ணம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ரூசோ செய்திருந்தார். இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்