< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
|30 May 2022 1:33 AM IST
இந்த போட்டியில் 9 மாநிலங்களில் இருந்து 29 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி,
திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டிய மாநிலம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி என மொத்தம் 9 மாநிலங்களில் இருந்து 29 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இருவரும் புள்ளிகளின் அடிப்படையில் சமநிலையில் உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருகின்ற பாரா ஏசியன் போட்டிகளில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.