< Back
மாநில செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்ப்பதற்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 மாணவ -மாணவிகள் தேர்வு
ஈரோடு
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்ப்பதற்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 மாணவ -மாணவிகள் தேர்வு

தினத்தந்தி
|
19 Jun 2022 3:43 AM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்ப்பதற்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 மாணவ -மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஈரோடு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்ப்பதற்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 மாணவ -மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடக்கிறது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியை கண்டு களிக்க ஒரு வாய்ப்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 3 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இருந்து 3 பேரை அனுப்புவதற்கான செஸ் தேர்வு போட்டி, ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலையம் பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் செயலாளர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். கொங்கு கல்வி நிலைய தலைவர் எம்.சின்னசாமி, தாளாளர் கே.செல்வராஜ் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

3 பேர் தேர்வு

இந்த போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட மாணவ -மாணவிகளுக்கான தேர்வு போட்டி நடந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். போட்டியில் வெற்றி பெரும் 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. போட்டிகள் தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

மேலும் இந்த போட்டியில் முதல் பரிசு பெரும் ஒரு மாணவி, ஒரு மாணவன் மற்றும் அரசு பள்ளிக்கூட மாணவர் -மாணவி ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களை சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை 2 நாட்கள் தங்கி கண்டு களிக்க அகில இந்திய சதுரங்க கழகம் ஏற்பாடு செய்து உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்