திருவள்ளூரில் சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்
|தமிழ்நாடு முழுவதும் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தி வருகின்றது.
திருவள்ளுர்,
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளதால் தி.மு.க. தேர்தல் பணியை வேகப்படுத்தி வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளர்களை (பி.எல்.ஏ.2) நியமனம் செய்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தது 20 கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்து தேர்தல் பணியை தி.மு.க. செய்து வருகின்றது.
இந்த நிலையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மண்டல அளவில் கூட்டி அரசியல் வியூகம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே திருச்சி, ராமநாதபுரம், காங்கேயம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று திருவள்ளூரில் சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 11,569 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.