< Back
மாநில செய்திகள்
சென்னை: அண்ணா சாலையில் வளைந்து நெளிந்து பைக் சாகசம் செய்த இளைஞர்கள் கைது
மாநில செய்திகள்

சென்னை: அண்ணா சாலையில் வளைந்து நெளிந்து பைக் சாகசம் செய்த இளைஞர்கள் கைது

தினத்தந்தி
|
10 Sept 2022 2:04 PM IST

அண்ணா சாலையில், ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை அண்ணா சாலையில், ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சமூக வலைதளத்தில் பைக் வீலிங் வீடியோ பரவியதை கண்காணித்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த முகமது ஹாரிஸ், முகமது சைபான் ஆகியோரை கைது செய்தனர்.

காவல்துறையின் கடும் கட்டுப்பாட்டை மீறியும் சென்னையில் மீண்டும் பைக் சாகசம் தலை தூக்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்