< Back
மாநில செய்திகள்
சென்னை: மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர் கைது
மாநில செய்திகள்

சென்னை: மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர் கைது

தினத்தந்தி
|
27 July 2024 9:51 AM IST

மெட்ரோ ரெயிலில் இளைஞர் கஞ்சா பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார்.

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் புவனேஷ்(24). இவர் சென்னையில் உணவு டெலிவரி செய்யும் பணி செய்து வருகிறார். இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் பயணிகளுக்கு மத்தியில் புவனேஷ் சர்வ சாதாரணமாக கஞ்சா பயன்படுத்தியுள்ளார்.

மெட்ரோ ரெயிலில் இளைஞர் கஞ்சா பயன்படுத்தியதாக புகைப்படம் வெளியிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்திய புவனேஷை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்