< Back
மாநில செய்திகள்
கார் தடுப்பில் மோதி சென்னை பெண் பலி
திருச்சி
மாநில செய்திகள்

கார் தடுப்பில் மோதி சென்னை பெண் பலி

தினத்தந்தி
|
1 Jun 2022 1:09 AM IST

கார் தடுப்பில் மோதி சென்னை பெண் பலியானார்.

வையம்பட்டி, ஜூன்.1-

சென்னை தாம்பரம் அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 52). இவர் மற்றும் உறவினர்கள் ஹரி (32), சரிதா (40), யுவராணி (31), சாய் (6), தர்ஷன் (8), கனிஷ்க் உள்பட 8 பேர் ஒரு காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். கார் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பாலத்தின் தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் சாவித்திரி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் இந்த விபத்தில் காரில் இருந்த ஹரி, சரிதா உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதியினர் அவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்