< Back
மாநில செய்திகள்
பூண்டி ஏரியில் மூழ்கி சென்னை பெண் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பூண்டி ஏரியில் மூழ்கி சென்னை பெண் பலி

தினத்தந்தி
|
13 Sept 2023 12:41 PM IST

பூண்டி ஏரியில் மூழ்கி சென்னை பெண் பலியானார்.

சென்னை கோயம்பேடு பாடிகுப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 45). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வருகிறார். இவர்ஆண்டு தோறும் திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன் பேரில் அவர் தனது மனைவி சுகந்தி (வயது 38), மற்றும் உறவினர்களுடன் நேற்று பெரியபாளையம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். சாமி தரிசனம் முடிந்த பின்னர் பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை சென்றடைந்தார். அங்குள்ள பூங்காக்களை பார்வையிட்டு விட்டு ஏரியில் குளிக்க சென்றார். அவருடன் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் குளித்தனர்.

கிருஷ்ணா நதி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையாலும் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. சுகந்தி ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கி விட்டார். கிருஷ்ணகுமார் மற்றும் உறவினர்கள் சுகந்தியை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. அவர் ஏரியில் மூழ்கி இறந்தார். கணவன் கண் எதிரே இந்த சோகம் நடைபெற்றது.

பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்