< Back
மாநில செய்திகள்
சென்னை விம்கோ நகரில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு: தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சீராக இயக்கம்
மாநில செய்திகள்

சென்னை விம்கோ நகரில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு: தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சீராக இயக்கம்

தினத்தந்தி
|
17 July 2023 9:05 AM IST

சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரெயில் மூலம் அலுவலகம், கல்லூரிகளுக்குப் போக்குவரத்து நெரிசலின்றி சென்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலான நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ சேவை இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் - விம்கோ நகர் பணிமனைக்குச் செல்லும் தடத்தில் மின் விநியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி மெட்ரோ முதல் விம்கோ நகர் மெட்ரோ வரையில் ஒருவழிப்பாதை மெட்ரோ தான் உள்ளது. இதனால், விம்கோ நகர் வரை 18 நிமிட இடைவெளியில் தற்போது மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

இதனால், விம்கோ நகர், திருவொற்றியூர் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மின் விநியோக பிரச்சினையைச் சரிசெய்யும் பணிகளில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் வழக்கமான சேவை தொடரும் என்று மெட்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரெயில்கள் சீராக இயக்கப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்