< Back
மாநில செய்திகள்
சென்னை: அரசு குளிர்சாதன பஸ்சின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு
மாநில செய்திகள்

சென்னை: அரசு குளிர்சாதன பஸ்சின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
24 Nov 2022 7:04 PM IST

தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த அரசு குளிர்சாதன பஸ்சின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை பிராட்வேயில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு குளிர்சாதன பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்த போது திடீரென பஸ்சின் மேற்கூரையில் இருந்து புகை கிளம்பியது. இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புகை கிளம்புவதாக கூச்சலிட்டனர்.

இதைக் கவனித்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கிழே இறங்குமாறு அறிவுறுத்தினர். பஸ்சின் மேற்கூரையில் புகை கிளம்பும் தகவல் அறிந்ததும் பயணிகளும் அச்சத்தில் அவசர அவசரமாக பஸ்சை விட்டு இறங்கினர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர், பொதுமக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி புகை அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்