< Back
மாநில செய்திகள்
சென்னை: ஓடும் பஸ்சில் ரூ.1 லட்சம் திருட்டு.. கண்ணீருடன் கதறி அழுத பெண்
மாநில செய்திகள்

சென்னை: ஓடும் பஸ்சில் ரூ.1 லட்சம் திருட்டு.. கண்ணீருடன் கதறி அழுத பெண்

தினத்தந்தி
|
23 July 2024 9:25 AM IST

பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ,1 லட்சம் மாயமாகி இருந்தது.

சென்னை,

சென்னை, திருவொற்றியூர் மல்லிகாபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபானி. எலக்ட்ரீசியன். இவரது மனைவி அமலு (வயது 37). இவர், நேற்று ரூ,1 லட்சத்துடன் ராயபுரம் எம்.சி.ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து மாநகர பஸ்சில்(தடம் எண். 56 ஏ) ஏறி திருவொற்றியூர் ராஜகடை பஸ் நிறுத்தத்தில் இறங்க முயற்சி செய்தார்.

அப்போது தன்னிடம் இருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ,1 லட்சம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஓடும் பஸ்சில் யாரோ அவரிடம் இருந்த பணத்தை திருடிச்சென்று உள்ளனர். பணத்தை இழந்த அமலு, கதறி அழுதார். இது குறித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்