< Back
மாநில செய்திகள்
சென்னை: உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி சென்ற மத்திய மந்திரி
மாநில செய்திகள்

சென்னை: உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி சென்ற மத்திய மந்திரி

தினத்தந்தி
|
26 Jun 2022 11:49 AM IST

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சென்னையில் தொடங்கி வைத்தார்.

சென்னை,

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக சென்னையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் துவங்கிய பேரணியை மத்திய அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், தானும் அதில் ஈடுபட்டார். ஆரோக்கியமான வாழ்க்கையை உணர்த்தும் விதமாக நடைபெற்ற பேரணியில் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பேரணியானது விருந்தினர் மாளிகையில் தொடங்கி கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் விருந்தினர் மாளிகையை அடைந்தது.

மேலும் செய்திகள்