< Back
மாநில செய்திகள்
சென்னை: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் ஒருவழி சாலையாக செயல்படும் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சென்னை: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் ஒருவழி சாலையாக செயல்படும் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

தினத்தந்தி
|
26 April 2024 2:16 AM IST

ரெயில்வே இருப்பு பாதை பணி காரணமாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் ஒருவழி சாலையாக செயல்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"தெற்கு ரெயில்வே சார்பில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4-வது ரெயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. 26-ந்தேதி (இன்று) இரவு 10 மணி முதல் 3 மாத காலத்துக்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக பின்வருமாறு செயல்பாட்டுக்கு வரும்.

* ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அனுகு சாலை, வடக்கு கோட்டை சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி சாலை, டாக்டர் முத்துசாமி பாலம், வாலாஜா பாயிண்ட், கொடி மர சாலை, போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

* காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம்போல் இயக்கப்படும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்