< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை: மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து - 2 கார்கள் சேதம்
|25 Jun 2022 11:42 AM IST
புது வண்ணாரப்பேட்டையில் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 கார்கள் சேதம் அடைந்து உள்ளது.
ராயபுரம்,
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு சொந்தமான பாபு ஜெகஜீவன்ராம் விளையாட்டு மைதானம் உள்ளது.
நேற்று இரவு திடீரென பெய்த மழையின் காரணமாக இந்த மைதானத்தின் 60 அடி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுற்றுச்சுவர் அருகிலிருந்த இரண்டு கார்கள் சேதம் அடைந்தது.
மைதானத்தில் தினமும் காலையில் ஏராளமானோர் நடை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். மேலும், இந்த சுற்றுச் சுவரின் அருகில் ஏராளமான நடைபாதை கடைகள் இயங்கி வருகின்றது.
இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.