< Back
மாநில செய்திகள்
இறுதிப்போட்டியில் சென்னை அணி; நேப்பியர் பாலத்தில் அனுமதியின்றி படப்பிடிப்பு - போலீசார் வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

இறுதிப்போட்டியில் சென்னை அணி; நேப்பியர் பாலத்தில் அனுமதியின்றி படப்பிடிப்பு - போலீசார் வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
27 May 2023 4:01 PM IST

சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை கொண்டாடும் வகையில் நேப்பியர் பாலத்தில் படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது.

சென்னை,

சென்னை நேப்பியர் பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, நேப்பியர் பாலத்தில் சிலர் படப்பிடிப்பு நடத்தியதைக் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியதை கொண்டாடும் வகையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது தெரியவந்தது.

இருப்பினும் படப்பிடிப்பு நடத்திய நபர்களிடம் உரிய அனுமதி சான்று இல்லாதது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதற்காக பெசண்ட் நகரைச் சேர்ந்த விஜய்சேகர் மற்றும் மாதவரைத்தைச் சேர்ந்த யோகேஷ் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்