< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் - உரிமையாளர் கைது; 4 பெண்கள் மீட்பு
|17 Sept 2022 9:58 PM IST
சென்னையில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீராம் காலனியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் உதவி கமிஷனர் வி.ராஜலட்சுமி தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்தனர். இதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளரான காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பல்லாவரம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த நிர்மல் ராஜ்(வயது 31) கைது செய்யப்பட்டார். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.