< Back
மாநில செய்திகள்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஜூலை மாதத்திற்குள் முடிவடையும் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
மாநில செய்திகள்

'சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஜூலை மாதத்திற்குள் முடிவடையும்' - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

தினத்தந்தி
|
25 Feb 2024 5:01 PM IST

சுமார் ரூ.150 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருவதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று விட்டன. சில இடங்களில் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. குறிப்பாக முகலிவாக்கம். கொளப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வளத்துறை மூலம் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளுக்கான அனுமதி கடந்த ஆண்டு கிடைத்த நிலையில், சென்ற வருடம் மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெறவில்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்குள் பணிகள் நிறைவு பெற்றுவிடும். இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்