< Back
மாநில செய்திகள்
சென்னை: வீட்டில் ஏசி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

சென்னை: வீட்டில் ஏசி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
1 Aug 2022 4:46 PM IST

சென்னை அருகே வீட்டில் ஏசி வெடித்து தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திரு.வி.க நகர்,

சென்னை கொளத்தூர் வெற்றி நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷியாம் (வயது 28). இவர் ஆவின் விற்பனை பிரதி நிதியாக வேலை செய்து வருகிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணிஅளவில் ஷியாம் வீட்டில் தனது அறையில் ஏ.சி மற்றும் டி.வியை ஆன் செய்துவிட்டு படுத்துக் கொண்டிருந்தார்.

திடீரென ஏ.சி தீ பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. ஏசி வெடித்த சத்தம் கேட்டு முதல் தளத்தில் இருந்த அவரது அப்பா மற்றும் தம்பி வந்து பார்த்தபோது தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதனால் அறைக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் திரு.வி.க நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் ஷியாமை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் உடல் முழுவதும் தீப்பற்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்