< Back
மாநில செய்திகள்
சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயிலில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.!
மாநில செய்திகள்

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயிலில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.!

தினத்தந்தி
|
24 Sept 2023 7:46 PM IST

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயிலில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டது.

சென்னை,

மினி புல்லட் ரெயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் ரெயில், தமிழகத்தை பொறுத்தவரை மைசூரு-சென்னை இடையே கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதே போல் கோவை-சென்னை இடையேயும் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி முதல் வந்தே பாரத் பயணித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து தென்மாவட்ட பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நெல்லை-சென்னை இடையே 8 பெட்டிகளுடன் கூடிய வந்தேபாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும். இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பயணிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் பயணித்தனர்.

இந்த நிலையில், நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. வந்தேபாரத் ரெயிலின் கட்டணம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முக்கிய நாட்களுக்கான டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவாகி விற்றுத்தீர்ந்தன. பின்னர் செய்யப்பட்ட பதிவுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாறின. பயணிகளின் ஆர்வம் காரணமாக, அக்டோபர் 2-ம் தேதி வரையில் முன்பதிவு பயணச்சீட்டுகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்