விருதுநகர்
சென்னை-நெல்லை வந்தே பாரத் ெரயில்:சாத்தூர், திருமங்கலம் ெரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்
|சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ெரயிலை திருமங்கலம் மற்றும் சாத்தூர் ெரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ெரயில்வே மந்திரிக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
விருதுநகர்,
இதுகுறித்து மத்திய ெரயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்ணவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
வந்தே பாரத் ெரயில்
மத்திய ெரயில்வே துறை தென் மாவட்டங்களுக்கான ெரயில் போக்குவரத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ெரயில் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது. ஆனால் இந்த ெரயில் முக்கிய ெரயில் நிலையங்களான விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய ெரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசியம்
இந்த வந்தே பாரத் ெரயில் தென் மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரான சாத்தூர் மற்றும் திருமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தூரில் பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வரும் நிலையிலும் விருதுநகர்- மதுரை இடையே முக்கிய தொழில்நகராக திருமங்கலம் உள்ள நிலையிலும் இந்த 2 ெரயில் நிலையங்களிலும் வந்தே பாரத் ெரயில் நின்று செல்ல வேண்டியது அவசியமாகும்.
ெரயில் போக்குவரத்து என்பது மக்களின் வசதிக்காக தான். எனவே மக்களின் வசதி கருதி ெரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
கோரிக்கை
எனவே தாங்கள் இது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து சென்னை-நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருமங்கலம் மற்றும் சாத்தூர் ெரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன். இந்த விஷயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.