< Back
மாநில செய்திகள்
சென்னை மயிலாப்பூர்  சாய்பாபா கோவிலில் தீ விபத்து- ரக்கெட் பட்டாசு வெடித்தபோது விபரீதம்
மாநில செய்திகள்

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீ விபத்து- ரக்கெட் பட்டாசு வெடித்தபோது விபரீதம்

தினத்தந்தி
|
12 Nov 2023 7:49 PM IST

தீபாவளி பண்டிகையை ஒட்டி அப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து வரும் நிலையில் அதில் ஒரு ராக்கெட் வெடி, கோவில் கோபுரத்தை சுற்றி வைக்கப்பட்டு இருந்த ஓலையில் பட்டு தீ பிடித்தது.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் புதிதாக கோபுரம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோபுரத்தை சுற்றி ஓலை வைக்கப்பட்டு கோபுரம் தெரியாதபடி மறைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி அப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து வரும் நிலையில் அதில் ஒரு ராக்கெட் வெடி, கோவில் கோபுரத்தை சுற்றி வைக்கப்பட்டு இருந்த ஓலையில் பட்டு தீ பிடித்தது.

இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்