< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சாலையோரம் நடந்து சென்ற பெண் - மோட்டார் சைக்கிள் மோதி பலி
|10 Aug 2022 10:26 AM IST
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி விஜயா (வயது 56). இவர், எம்.ஜி.ஆர். நகர் பிரதான சாலை கே .கே .சாலை சந்திப்பில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜயா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய நபர், நிற்காமல் தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.