< Back
மாநில செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கை மே மாதம் அதிகரிப்பு
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கை மே மாதம் அதிகரிப்பு

தினத்தந்தி
|
1 Jun 2024 7:02 PM IST

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கை மே மாதத்தில் 84.21 லட்சமாக அதிகரித்துள்ளது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் உதவியாக இருந்து வருகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 80.87 லட்சமாக இருந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை மே மாதத்தில் 84.21 லட்சமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மே 10-ந்தேதி 3 லட்சத்து 3 ஆயிரத்து 109 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே போல் மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஆன்லைன் கியூ.ஆர்.கோடு மூலம் 36.97 லட்சம் பேர் பயணச்சீட்டு வாங்கியுள்ளனர். மேலும் 32 லட்சம் பேர் பயண அட்டைகள் மூலமாகவும், 52 ஆயிரம் பேர் டோக்கன்கள் மூலமாகவும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்த்தக்கது.



மேலும் செய்திகள்