< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பதவி ஏற்பு
|14 Jun 2022 7:54 AM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குனராக எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் முதன்மைச் செயலாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குனராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டார். இவர், கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு இயக்குனர்கள், ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), டி.அர்ச்சுனன் (திட்டங்கள்), டாக்டர் பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), டாக்டர் கே.பிரபாகர் (முதன்மை பாதுகாப்பு அதிகாரி), முதன்மை ஆலோசகர் ராஜீவ் கே.ஸ்ரீவத்ஸ்தவா (சுற்றுசூழல்) மற்றும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து கூறினர்.