< Back
மாநில செய்திகள்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த தேங்காயால் பரபரப்பு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த தேங்காயால் பரபரப்பு

தினத்தந்தி
|
7 Feb 2023 10:36 AM IST

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த தேங்காயால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் மத்திய தொழிற்படை போலீசார் பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துவது வழக்கம். அதன் பின்னரே பயணிகள் விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு 2-வது நுழைவு வாயில் அருகே பயணிகள் உடைமைகளை ஏற்றிச்செல்ல பயன்படும் டிராலி ஒன்றில் தேங்காய் போன்ற பொருள் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனால் அது வெடிப்பொருளாக ஏதேனும் இருக்குமோ? என பயணிகள் அச்சமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அந்த பொருளை சோதித்த போது, அது வெடிகுண்டு இல்லை என்பதும், விமானத்தில் தேங்காய் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதால் ஏதோ ஒரு பயணி தேங்காயை டிராலியில் போட்டு சென்றதும் தெரியவந்தது. கேட்பாரற்று கிடந்த தேங்காயால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்