< Back
மாநில செய்திகள்
சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது
மாநில செய்திகள்

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது

தினத்தந்தி
|
23 Feb 2024 8:57 PM IST

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேயர் பிரியா சென்ற கார் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயமின்றி தப்பினார். முன்னாள் சென்ற கார் திடீரென திரும்பியதால் மேயர் சென்ற கார் அதன்மீது மோதியது. பின்னால் வந்த லாரியும் மேயர் பிரியா சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுநர் லேசாக காயமடைந்தார். விபத்தில் காயமின்றி தப்பிய பிரியா மாற்றுக்கார் வரவழைத்து புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்