< Back
மாநில செய்திகள்
அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள் - சென்னை மேயர் பிரியா
மாநில செய்திகள்

"அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்" - சென்னை மேயர் பிரியா

தினத்தந்தி
|
14 Dec 2022 2:31 PM IST

சென்னை மேயர் பிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டுத்துறை, புதிதாக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சராக பதவியேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னை மேயர் பிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "அமைதியாய் இருந்தாலும்...! அடக்கமாய்த் திகழ்ந்தாலும்...! அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!" என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்