< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை மணலி புதுநகரில் பேருந்து நிழற்குடை அமைக்கும்போது விபத்து - மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியர்கள் படுகாயம்
|24 Sept 2023 4:36 PM IST
காயமடைந்த 4 பேரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
சென்னை,
சென்னை மணலி புதுநகர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த மின் வயரில் கிரேன் எந்திரம் உரசியதால், அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
மின்சாரம் தாக்கியதில் தினேஷ், நாகராஜ், கிருஷ்ணன், சேகர் ஆகிய 4 பேர் சுமார் 5 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த 4 பேரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.