< Back
மாநில செய்திகள்
வந்தோரை எல்லாம் வாழவைக்கும் உயரிய நகரம் சென்னை - அண்ணாமலை
மாநில செய்திகள்

'வந்தோரை எல்லாம் வாழவைக்கும் உயரிய நகரம் சென்னை' - அண்ணாமலை

தினத்தந்தி
|
22 Aug 2024 12:50 PM IST

பல சாதனையாளர்களை உருவாக்கிய மண் நமது சென்னை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

385-வது சென்னை தினத்தை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"இந்திய அளவிலும், உலக அளவிலும் முக்கியமான நகரங்களில் ஒன்றான, நமது சென்னை மாநகரம் உருவான தினம் இன்று.

பல சாதனையாளர்களை உருவாக்கிய மண் நமது சென்னை. உழைப்பவர்களுக்கு நிச்சயம் உயர்வைக் கொடுத்து, வந்தோரை எல்லாம் வாழவைக்கும் உயரிய நகரம். கடந்த 1639 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 385 ஆண்டுகளில், பல வரலாறுகளைச் சுமந்து பயணித்துக் கொண்டிருக்கிறது நமது தலைநகரம்.

நமது சென்னை, மேலும் பல நூற்றாண்டுகள் தனது தனிச்சிறப்போடு வளர்ச்சி பெறவும், புதிய வரலாற்றினை உருவாக்கவும், தமிழக பாஜக சார்பாக, அனைவருக்கும் இனிய மெட்ராஸ் டே வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்