சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
|சென்னை ஐஐடியில் ஒடிசாவை சேர்ந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்குக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐஐடியில் 4-ஆம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் இருந்த அவர், ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஐஐடியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சென்னை ஐஐடியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்குக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்வி நிலைய வளாகங்களில் நடைபெறும் தற்கொலைகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாணவன் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்குக்கு மாற்றம் செய்யப்பட்டும் என தகவல் வெளியாகி உள்ளது.