< Back
மாநில செய்திகள்
சென்னை ஐ.ஐ.டி. மாணவியிடம் ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் மோசடி..!
சென்னை
மாநில செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி. மாணவியிடம் ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் மோசடி..!

தினத்தந்தி
|
11 Jun 2022 9:24 AM IST

சென்னை ஐ.ஐ.டி. மாணவியிடம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ளனர்.

சென்னை:

சென்னை ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கு மாணவி சரிதா தல்லூரு, மயிலாப்பூர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் தனக்கு பகுதி நேர வேலை வாங்கி தருவதாக ஒரு நபர் கூறியதன் பேரில்,ரூ.1 லட்சம் ஆன்லைன் மூலம் அனுப்பியதாகவும், ஆனால் வேலை வாங்கி தராமல் அந்த நபர் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் புகாரில் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக மயிலாப்பூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்