< Back
மாநில செய்திகள்
அமைச்சராக தொடர எதிர்ப்பு... செந்தில்பாலாஜி மீதான வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

அமைச்சராக தொடர எதிர்ப்பு... செந்தில்பாலாஜி மீதான வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
26 Jun 2023 3:35 PM IST

செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

சென்னை,

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 3 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மனு தாக்கல் செய்தார்.

அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தவிற, மற்ற இரு வழக்குகள் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி துறை இல்லாத அமைச்சராக தொடரக்கூடாது என்று கவர்னர் எந்த உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதே சமயம், துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமிப்பதாக முதல் அமைச்சர் கவர்னருக்கு எழுதிய கடிதத்தை தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

அதன்படி, இந்த வழக்கு தற்போது தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதல் அமைச்சர் மற்றும் கவர்னருக்கு இடையிலான கடிதப்போக்குவரத்து ரகசியமானது என்பதால், அந்த கடிதத்தை தாக்கல் செய்யமுடியாது என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதனால், பத்திரிகை செய்திக்குறிப்பில் முதல்வர் பரிந்துரைத்ததை ஏற்றுகொண்டு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், கவர்னரே அதிருப்தி தெரிவித்த நிலையில், செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக நீடிக்கமுடியும்.. கவர்னரின் கருத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது எனவும் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை கவர்னர் ஏற்கவில்லை என்பதற்கும், அவரை நீக்க உத்தரவிட்டார் என்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக பத்திரிகை செய்தி அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், கவர்னர், முதல் அமைச்சர் தரப்பில் எழுதப்பட்ட கடிதப்பட்ட கடிதங்களை தாக்கல் செய்தால், அதைப்பொறுத்து தான் உத்தரவிட முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இறுதியில், செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளையும் ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்