< Back
மாநில செய்திகள்
சென்னை எழும்பூர்-தூத்துக்குடி இடையே நாளை அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கம்
மாநில செய்திகள்

சென்னை எழும்பூர்-தூத்துக்குடி இடையே நாளை அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கம்

தினத்தந்தி
|
9 Nov 2023 8:52 AM IST

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இந்த அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண். 06001) நாளை (10.11.2023) மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

இதேபோல மறுமார்க்கமாக, அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002) 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்