சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் பகுதியளவு ரத்து
|சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியளவு ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ள
சென்னை,
திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16127) எர்ணாகுளம் மற்றும் குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்துச்செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) குருவாயூர் - எர்ணாகுளம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக எர்ணாகுளத்தில் இருந்து 6-ந்தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும்.
மேலும், மதுரையில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 11.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16327) எர்ணாகுளம் மற்றும் குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16328) குருவாயூர் - எர்ணாகுளம் இடையே பகுதியளவு ரத்துசெய்யப்பட்டு, குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக எர்ணாகுளத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும்.
இதேபோல, குருவாயூரில் இருந்து வரும் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி, 12-ந்தேதி, 14-ந்தேதி முதல் 17-ந்தேதி, 19-ந்தேதி, 21-ந்தேதி முதல் 24-ந்தேதி, 28-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரையில் கோட்டயம் வழித்தடத்தில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.