< Back
மாநில செய்திகள்
சென்னை தினம்: சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலாசார நிகழ்ச்சிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில செய்திகள்

சென்னை தினம்: சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலாசார நிகழ்ச்சிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
21 Aug 2022 8:19 AM IST

சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தினம் கொண்டாட்டத்தையொட்டி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீர் அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகள் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் சுமார் 1,055 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதல்-அமைச்சர், சென்னை மேயராக இருந்தபோதுதான் சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன துரிதப்படுத்தப்பட்டன.

பிற மாநிலத்தவரும் வியக்கும் வகையில் சென்னையில் அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதிகள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய திருவிழா நாட்களில் இது போன்ற சிறப்பு அங்காடிகள் அமைக்கப்பட்டு கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை தினம் சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்