< Back
மாநில செய்திகள்
தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி திட்டம்!
மாநில செய்திகள்

தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி திட்டம்!

தினத்தந்தி
|
28 Nov 2023 9:27 AM IST

நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே தெரு நாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, சுமார் 93,000 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் போடப்பட்டு பின்னர் அதே தெருவில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில், அவைகளின் உடலின் ஒரு பகுதியில் வண்ணம் தீட்டவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் இதுவரை 8,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

மேலும் செய்திகள்