< Back
மாநில செய்திகள்
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனின் மகன் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனின் மகன் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி

தினத்தந்தி
|
24 May 2023 11:01 PM IST

அரவிந்த் ராதாகிருஷ்ணன் 361-வது இடத்தைப் பிடித்து யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன். முதுகலை மருத்துவம் படித்து வரும் இவர், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அண்மையில் யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரவிந்த் ராதாகிருஷ்ணன் 361-வது இடத்தைப் பிடித்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இருப்பினும் 361-வது இடம் கிடைத்துள்ளதால் அரவிந்த் மீண்டும் தேர்வு எழுத இருப்பதாக மாநகராட்சி ஆணையரும், அரவிந்தின் தந்தையுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனிடையே சமூக வலைதளங்களில் அரவிந்தின் வெற்றிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



மேலும் செய்திகள்