< Back
மாநில செய்திகள்
சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மன்றக்குழு நிர்வாகிகள் நியமனம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மன்றக்குழு நிர்வாகிகள் நியமனம்

தினத்தந்தி
|
5 Jun 2022 1:19 AM IST

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மன்றக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்தின் அ.தி.மு.க. குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த குழுவின் தலைவராக 182-வது வார்டு கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

84-வது வார்டு கவுன்சிலர் ஜெ.ஜான், 145-வது வார்டு கவுன்சிலர் டி.சத்தியநாதன் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும், 7-வது வார்டு கவுன்சிலர் கே.கார்த்திக் செயலாளராகவும், 170-வது வார்டு கவுன்சிலர் கே.ஆர்.கதிர்முருகன் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக 24-வது வார்டு கவுன்சிலர் இ.சேட்டு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மேற்கண்ட தகவல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்