சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலில் 16ஆம் தேதி வரை இருக்கைகள் நிரம்பியது
|சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரெயிலின் இருக்கைகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு நிரம்பியுள்ளது.
சென்னை,
சென்னை செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவை வரை வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை-கோவை இடையே இரு மார்க்கமாக இயக்கப்படும் இந்த ரெயில், வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்கும். இதன்மூலம் சென்னை-கோவை இடையேயான பயணத்தை வெறும் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணிகள் மேற்கொள்ள முடியும்.
வந்தே பாரத் ரெயிலில் சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல சேர் கார் பயணத்துக்கு ரூ.1,365-ம், எக்சிகியூட்டிவ் சேர் கார் பயணத்துக்கு ரூ.2,485-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல கோவையில் இருந்து சென்னைக்கு சேர் கார் பயணத்துக்கு ரூ.1,215-ம், எக்சிகியூட்டிவ் சேர் கார் பயணத்துக்கு ரூ.2,310-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட்டுகள் அனைத்தும் அடுத்த வாரம் 16ம் தேதி வரை நிரம்பியுள்ளது.