< Back
மாநில செய்திகள்
சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசுப்போட்டி - ஐ.பி.எல். கிரிக்கெட்டை நேரில் காண 25 இலவச டிக்கெட்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசுப்போட்டி - ஐ.பி.எல். கிரிக்கெட்டை நேரில் காண 25 இலவச டிக்கெட்

தினத்தந்தி
|
7 May 2023 3:34 PM IST

சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசுப்போட்டியில் பங்கேற்று ஐ.பி.எல். கிரிக்கெட்டை நேரில் காண 25 இலவச டிக்கெட்களை 12 போட்டியாளர்கள் தட்டி சென்றனர்.

டி.என்.பி.எல். தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையுடன் வலம் வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஐ.பி.எல். தொடருக்காக இலவச டிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான 49-வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, கிரிக்கெட் டிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதற்காக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன.அவற்றிற்கு பதில் அளிப்பதோடு போட்டியாளர்களுக்கு சில 'டாஸ்க்'குகளும் கொடுக்கப்பட்டன. அவை அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்த 12 வெற்றியாளர்கள் 25 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை தட்டிச்சென்றனர். மேலும், ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் 'ஜெர்சி' வழங்கப்பட்டு உள்ளது.

டிக்கெட்டை வென்ற பவேத் ராஜா என்ற கிரிக்கெட் ரசிகர், 'தோனியை நேரில் பார்ப்பதற்கு தேனியில் இருந்து வந்ததாக' மகிழ்ச்சி தெரிவித்தார். அதே போல் டிக்கெட்டை வாங்க வந்த சேலத்தை சேர்ந்த ரவீந்திரன், அவ்வளவு மழையிலும் சி.எஸ்.கே 'மேட்ச்'சை பார்க்கத்தான் சென்னை வந்ததாக நெகிழ்ந்தார். சென்னையை சேர்ந்த மிதுன்ராஜ் என்பவர், இரவு முழுவதும் சேப்பாக்கம் மைதானத்தில் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசு போட்டி மூலம் இலவசமாக டிக்கெட் வென்றுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்