< Back
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல் - கோரக்பூர் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை சென்டிரல் - கோரக்பூர் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
18 March 2024 12:15 AM IST

சென்னை சென்டிரல் - கோரக்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்டிரல் - கோரக்பூர் இடையே ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் செல்லும் ஒரு வழி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.06089) புறப்பட்டதிலிருந்து 3-வது நாள் (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கோரக்பூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்