< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்
|3 March 2023 9:38 AM IST
சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரயில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் இரண்டரை லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.