திருவண்ணாமலை
சென்னை கார்பெண்டர் திடீர் சாவு
|பருவத மலைக்கு சாமி கும்பிட சென்ற சென்னை கார்பெண்டர் திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடலை டோலி கட்டி தூக்கி வந்தனர்.
கலசபாக்கம்
பருவத மலைக்கு சாமி கும்பிட சென்ற சென்னை கார்பெண்டர் திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடலை டோலி கட்டி தூக்கி வந்தனர்.
கார்பெண்டர்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென்மாதிமங்கலம், கடலாடி கிராமங்களுக்கு இடையே சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட பருவதமலை உள்ளது.
இங்கு சாமி கும்பிட சென்னை பள்ளிகரணை நாராயணபுரத்தை சேர்ந்த கார்பெண்டர் முருகேசன் (வயது 48) என்பவர் மினிபஸ் மூலம் சுமார் 20 பேருடன் நேற்று நள்ளிரவு வந்தார்.
பருவதமலை அடிவாரத்தில் உள்ள தென்மாதிமங்கலம் கிராமத்தில் மினிபஸ்சை நிறுத்திவிட்டு அவர்கள் மலையேற தொடங்கினர்.
திடீர் சாவு
இன்று அதிகாலை 5 மணிக்கு மலை உச்சிக்கு ஏறிய போது முருகேசனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக உடன் வந்தவர்கள் கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் போலீசார் போளூர் மற்றும் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்களுடன் மலை உச்சிக்கு சென்று இறந்த முருகேசனின் உடலை டோலி கட்டி கீழே இறக்கி வந்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.