< Back
மாநில செய்திகள்
சென்னை வந்த பேருந்துகள் அடுத்தடுத்து மோதல்: 15 பேர் காயம்
மாநில செய்திகள்

சென்னை வந்த பேருந்துகள் அடுத்தடுத்து மோதல்: 15 பேர் காயம்

தினத்தந்தி
|
2 Sept 2024 9:03 AM IST

விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர், லாரி ஓட்டுநர், பயணிகள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அப்போது மதுரையில் இருந்து சென்னை சென்ற மற்றொரு பேருந்தும் இதில் சிக்கி விபத்துக்குள்ளானது.

அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதிக்கொண்ட நிலையில், மினி லாரி ஒன்று அரசு பேருந்து மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர், லாரி ஓட்டுநர், பயணிகள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்