< Back
மாநில செய்திகள்
சென்னை பிராட்வே கட்டட விபத்து - உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்
மாநில செய்திகள்

சென்னை பிராட்வே கட்டட விபத்து - உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்

தினத்தந்தி
|
20 April 2023 6:31 PM IST

கட்டடத்தின் உரிமையாளர்கள் தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்ட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை,

சென்னை பிராட்வே அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமையான நான்கு மாடி கட்டிடம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டடத்தின் உரிமையாளர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கட்டட விபத்து குறித்து அதன் உரிமையாளர்கள் தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்ட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் கட்டட பழுது பார்க்கும் பணிக்கு மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாதது, பொதுமக்களுக்கு அபாயகரமான பாதிப்பை ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் பணியை மேற்கொண்டது உள்ளிட்ட காரணங்களுக்காக உரிய விளக்கத்தை உடனே அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விதிமீறல் காரணங்களுக்காக தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்