< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை புத்தகக் காட்சி நிறைவு: கடைசி நாளில் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்ற மக்கள்
|21 Jan 2024 9:38 PM IST
இந்த ஆண்டு கட்டுரை நூல்கள், சிறுவர் இலக்கிய புத்தகங்கள் அதிகளவு விற்பனையாகி உள்ளன.
சென்னை,
சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும் புத்தகக்காட்சி மிகவும் புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான சென்னை புத்தகக்காட்சி கடந்த 3-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.
லட்சக்கணக்கான வாசகர்கள் புத்தகக்காட்சிக்கு வந்து ஏராளமான புத்தகங்களை வாங்கி சென்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு கட்டுரை நூல்கள், சிறுவர் இலக்கிய புத்தகங்கள் அதிகளவு விற்பனையாகி உள்ளன.
இந்த நிலையில், புத்தக காட்சி இன்றுடன் நிறைவுபெற்றது. கடைசி நாள் என்பதால் பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை முடிந்தவரை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் கூடுதல் சலுகைகளை அறிவித்தது. கடைசி நாளான இன்று பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச்சென்றனர்.