சென்னை கடற்கரை - எழும்பூர் இரவு நேர மின்சார ரெயில்கள் இன்று ரத்து
|சென்னை கடற்கரை, எழும்பூர் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9:55, 10 :10, 10:40, 11:15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், சென்னை எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 10:30, 11:00, 11:20, 11:40, 11:59, மற்றும் 19-ம் தேதி அதிகாலை 3:55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து இன்று இரவு 10:10, 11:00 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு10:45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
திருமால்பூரில் இருந்து இன்று இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில், எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.