< Back
மாநில செய்திகள்
சென்னை: அரும்பாக்கம் வங்கி கொள்ளை - போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் ஜாமின் மனு தள்ளுபடி
மாநில செய்திகள்

சென்னை: அரும்பாக்கம் வங்கி கொள்ளை - போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் ஜாமின் மனு தள்ளுபடி

தினத்தந்தி
|
5 Sept 2022 7:32 PM IST

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் சுமார் 31 கிலோ தங்க நகைகளை கடந்த மாதம் ஒரு கும்பல் கொள்ளை அடித்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், அதே வங்கியில் பணியாற்றிய முருகன் தனது கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ் ஆகியோருடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி இருப்பது தெரியவந்தது.

அவர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். அப்போது சந்தோஷ் கொள்ளை அடிக்கப்பட்ட நகையில் ஒரு பகுதியை தனது உறவினரான அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் கொடுத்து வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் கோவையில் நகை பட்டறை நடத்தி வரும் ஸ்ரீவத்சன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது இன்ஸ்பெக்டர் மனுவை திரும்ப பெறுவதாக அவர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை திரும்ப பெற அனுமதித்து, மனுவை தள்ளுபடி செய்தார். அதேபோல, ஸ்ரீவத்சன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்